News Update :

Tuesday, November 22, 2016

TamilLetter

தேர்தல் முடிவுகள்: 3 தொகுதிகள் அதிமுக வசம்



தமிழகத்தில் தஞ்சை,அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் மற்றும் நெல்லித்தோப்பு ஆகியத் தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தல்  வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்றன. 

இத்தேர்தலில், 3 தொகுதிகளிலும்  ஆளுங்கட்சியான அ.தி.மு.க  வெற்றிப்பெற்ற நிலையில், நெல்லித் தோப்பு தொகுதியில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. 

திருப்பரங்குன்றத்தில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் ஏ.கே போஸ் 27,744 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி பெற்றார். அவருக்கு 78,610 வாக்குகள் கிடைத்த வேளையில், அவரை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர், சரவணனுக்கு 50866 வாக்குகளும் கிடைத்தன.

அரவக்குறிச்சி தொகுதியில், அதிமுக வேட்பாளர்  செந்தில் பாலாஜி  14,648 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றிப்பெற்றார்.  இத்தொகுதியில் செந்தில் பாலாஜிக்கு 47,666 வாக்குகள் கிடைத்த வேளையில், அவருடன் போட்டியிட்ட திமுக வேட்பாளர் கே.சி பழனிசாமிக்கு 33018 வாக்குகள் கிடைத்தன. 

இதனிடையே தஞ்சையில்,   அதிமுக வேட்பாளர் ரங்கசாமி 27,468 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி பெற்றார். அவருக்கு 90,784 வாக்குகள் கிடைத்த நிலையில், அவரை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் அஞ்சுகத்திற்கு 63,316 வாக்குகள் கிடைத்தன.  

நெல்லித் தோப்பு பகுதியில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த  நாராயணசாமி வெற்றி பெற்றார். அவருக்கு 18,707 வாக்குகள் கிடைத்தன. 

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-