முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ வெளிநாடு செல்வதற்கு ஆட்சேபனைகள் இருக்குமாயின் நீதிமன்றத்தில் அறிவிக்குமாறு சட்டமா அதிபருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பசில் ராஜபக்ஷ எதிர்வரும் டிசம்பர் மாதம் 10 ஆம் திகதி தொடக்கம் மார்ச் மாதம் 2 ஆம் திகதிக்கு இடையில் வைத்திய சிகிச்சைகளுக்காக அமெரிக்கா செல்வதற்கான நீதிமன்ற அனுமதியை கோரியுள்ளார்.
இது தொடர்பில் விசாரணை செய்த கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சரோஜினி குசலா வீரவர்தன, பசில் ராஜபக்ஷ வெளிநாடு செல்வது தொடர்பில் சட்டமா அதிபரின் ஆட்சேபனைகள் இருக்குமாயின் எதிர்வரும் 25 ஆம் திகதிக்கு முன்னர் அறிவிக்கும்படி தெரிவித்துள்ளார்.
பசில் ராஜபக்ஷவின் கடவுச்சீட்டு நீதிமன்றத்தால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.